சீன உண­வு­கள் உல­கப் பிர­சித்­த­மா­னவை. பல­ரும் விரும்பி உண்­பவை. ஆனால், உல­கி­லேயே மிக மோச­மா­னது அதே சீன உண­வுச் சந்­தை­தான் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யுமா? பல நோய்­க­ளைக் கொண்­டு­ வ­ரும் விதத்­தில், இர­சா­ய­ணக் கல­வை­க­ளைப் பயன்­ப­டுத்தி, பல உணவு வகை­கள் தயா­ரிக்­கப்­பட்டு, சந்­தைப்­ப­டுத்­தப்­ப­டு­வது அதி­கா­ரி­க­ளால் கண்டு பிடிக்­கப்­ப ட்­டுள்­ளது.

ஆனால், முழு­வ­து­மாக நாம் சீன உண­வு­களே மோசம் என்று சொல்­வது தவறு. இப்­ப­டி­யான சில ‘புல்­லு­ரு­வி’­க­ளால், சீன உண­வு­கள் இப்­ப­டி­யொரு கெட்ட பெய­ரைச் சம்­பா­தித்து வரு­கின்­றன.

அசலை விட நகலை, அசத்­தும் வித­மா­கச் செய்­வ­தில், சீனர்­கள் படு கில்­லா­டி­கள். விலை­ம­திப்­பான ‘சுவிஸ் றோலெக்ஸ்’ கடி­கா­ரம் தொடக்­கம், அரிசி வரை இவர்­கள் வித்­தை­கள் தொடர்­கின்­றன. மிக விலை உயர்ந்த ‘வைன்’ குடி­பா­னங்­கள் இங்கே விற்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால் கவ­ன­மா­கப் பார்த்து வாங்­கா­த­வர்­கள் போலியை வாங்­கி ஏமாற வேண்­டி­ய­து­தான். இங்கே ஆட்டு இறைச்­சி­யின் விலை அதி­கம். எனவே நரி, எலி இறைச்­சி­க­ளை இர­சா­ய­னக் கல­வை­யால் பதப்படுத்தி, வித்­தி­யா­சங்­க­ளைப் புகுத்தி ‘ஆட்­டி­றைச்சி’ என்று விற்­கி­றார்­கள்.

இங்கே பன்றி இறைச்சி தாரா­ள­மாக உள்­ளது. ஆனால் மாட்­டி­றைச்­சிக்­குத் தட்­டுப்­பாடு இருக்­கின்­றது. எனவே பன்றி இறைச்­சியை மாட்டு இறைச்சி போலாக்கி, சுவை­யை­யும் மாற்றி விடு­கி­றார்­கள். இந்­தப் போலி­கள் புற்று நோய் உட்பட பல நோய்களைக் கொண்டு வரு­மென்று எச்­ச­ரிக்­கின்­றார்­கள் மருத்­து­வர்­கள்.

அச்சு அச­லாக அரிசி
இவர்­கள் தமது பிர­தான உண­வாக இருக்­கும் அரி­சி­யை­யும் விட்டு வைக்­க­வில்லை. கிழங்­கை­யும் வேறு சில மாப்­பொ­ருள்­க­ளை­யும் பயன்­ப­டுத்தி, போலி அரி­சியை உரு­வாக்­கிச் சந்­தைப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். இதை எரிக்­கும்­போது வரும் மணத்தை வைத்து இதைப் போலி என்று கண்டு பிடித்­து­வி­ட­லாம்.

சூடான நீரில் கரை­யும் தன்­மையை வைத்­தும் இப்­ப­டி­யான சில போலி­க­ளைக் கண்­டி­பி­டிக்­க­லாம் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது. முட்­டை­க­ளைக்கூட இவர்­கள் விட்­டு­வைக்­க­வில்லை. முட்­டை­யின் உட்­ப­குதி மஞ்­சள் கரு­வைப் பார்த்து அசந்து போகும் அள­வுக்கு நகலா­கத் தயா­ரிக்­கப்­பட்ட முட்­டை­கள் இங்கே காணப்­ப­டு­கின்­றன.

தேன் தயா­ரிப்பு!
சீனா­வில் தேன் உற்­பத்­தி­யில் பெரும் மோசடி நடாத்­தப்­ப­டு­வ­தைக் கண்­டு­பி­டித்­துள்­ளார்­கள். சீனா­வின் ‘ஜினான்’ என்ற பிர­தே­சத்­தில் விற்­ப­னை­யா­கும் தேனில் 70வீத­மா­னவை போலி­கள் என்று கண்­டு­பி­டித்­துள்­ளார்­கள். இந்­தப் போலி­க­ளில் கூட அண்­ணன்–தம்பி என்ற இரண்டு ரகங்கள் இருக்­கி­ன்றனவாம்!.

சீனி, பீட்­ரூட் உட்­பட இன்­னும் பல உண­வுப் பொருள்­க­ளின் கல­வை­யில் வரு­வது முதல் ரகம். சீனி, நீர், நிற­மூட்­டல் மூலம் வரு­வது இரண்டாவது ரகம். 1.5 டொலர் பெறு­ம­தி­யா­ன­தைக் கிட்­டத்­தட்ட 10டொல­ருக்கு இவர்­கள் சந்­தைப்­ப­டுத்­து­கி­றார்­கள்.

உண­வுக்­குச் சுவை­யூட்­டும் உப்­பில் கூட போலி நட­மா­டு­கி­ற­தாம். ‘மெலா­மைன்’ என்­பது இவர்­கள் சந்­தைப்­ப­டுத்­தும் போலிக் குழந்­தைப் பால்.

இது அருந்­து­வ­தற்கு ஏற்­ற­தல்ல. அப்­ப­டி­யி­ருந்­தும் தயா­ரிப்­புத் தொடர்­கி­றது. 2009ஆம் ஆண்­டில் 53ஆயி­ரம் குழந்­தை­கள் இந்­தப் பாலை அருந்தி நோய்­வாய்ப்­பட்­டுள்­ளார்­கள்.

உண­வில் மட்­டு­மல்ல…!
அட சாப்­பாடு மட்­டுந்­தானே இப்­ப­டித் தயா­ரிக்­கி­றார்­கள் என்று நாம் நிம்­ம­திப் பெரு­மூச்சு விட்­டு­விட முடி­யாது. கருத்­தடை சாத­னத்­தி­லும் போலி புகுந்­துள்­ளது. ஹெனான், ஷங்­காய் மாவட்­டங்­க­ளில் பல தொழிற்­சா­லை­க­ளில் 3மில்­லி­யன் தொகை­யான தரம் குறைந்த ஆணு­றை­கள் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­கச் செய்­தி­கள் வெளி­வந்­தன.

மங்­கிய வெளிச்­சத்­தில் நின்­று­கொண்டு இந்த உற்­பத்­தி­யில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருந்த தொழி­லா­ளி­களை, பொலி­ஸார் கையும் மெய்­யு­மா­கப் பிடித்­துள்­ளனர். இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு வந்த ஒரு செய்­தி­யில், ஐரோப்­பிய அமைப்பு ஒன்­றின் அறிக்­கை­யின்­படி, ஒரு வரு­டத்­தில் அரை ட்ரில்­லி­யன் டொலர் பெறு­ம­தி­யான போலி உற்­பத்­திப் பொருள்­கள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதில் 60வீத­மான பொருள்­கள் சீனா­வி­லி­ருந்தே வரு­கின்­ற­ன­வாம்! 2011ஆம் ஆண்­டுக்­கும் 2013ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில், அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கிய போலி உற்­பத்­தி­க­ளில் 63.2 வீத­மா­னவை சீனா­வில் உற்­பத்தி செய்­யப்­பட்­டவை. இவர்­க­ளுக்கு அடுத்து வரும் துருக்கி(3.3 வீதம்), சிங்­கப்­பூர்(1.9வீதம்), தாய்­லாந்து (1.6 வீதம்) ஆகிய மூன்ற நாடு­க­ளும் போலி­கள் விட­யத்­தில், சீனா­வுக்கு மிக எட்­டத்­தில் இருப்­ப­வர்­கள்.

இணைய விற்­ப­னையே இதற்கு உத்­வே­கம்
இவற்றை எப்­படி விற்­கி­றார்­கள் என்று பலர் அதி­ச­யப்­ப­ட­லாம். இந்த இடத்­தில் இணைய விற்­பனை இவர்­க­ளுக்­குக் கைகொ­டுத்து வரு­கின்­றது. ஹொங்­ஹொங், சிங்­கப்­பூர் சதந்­திர வர்த்­தக வல­யங்­கள், ஐக்­கிய அர­புக்குடி­ய­ரசு,பல­வீ­ன­மான அர­சைக் கொண்ட ஆப்­கா­னிஸ்­தான், சிரியா போன்ற நாடு­கள் இவர்­க­ளின் வர்த்­த­கத்­துக்­குரிய மத்திய நிலையமாக அமைந்­துள்­ளன.

போலி­கள் தயா­ரிப்பு பொருள்­க­ளோடு நின்­று­வி­ட­வில்லை. அது ‘வீடு’­வ­ரைக்­கும் போயி­ருக்­கின்­றது. இங்­கி­லாந்­தின் ஒரு நக­ரத்­தையே நக­லா­கத் தனது மண்­ணில் உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது சீனா. 500 மில்­லி­யன் பவுண்ட்ஸ் தொகை­யைச் செல­விட்டு ‘தேம்ஸ் நக­ரம்’ என்று அலு­வ­ல­க­ரீ­தி­யாக அதற்­குப் பெய­ரும் சூட்டி, ஷங்­கா­யி­லி­ருந்து 19 மைல் தூரத்­தில் இந்த நகலை நிர்­மா­ணித்­தி­ருக்­கி­றார்­கள்.

இங்­கி­லாந்­துக்கே உரித்­தான சிவப்பு நிறத் தீந்தை பூசப்­பட்டு வீதி ஓரங்­க­ளில் இருக்­கிற தொலை­பே­சிக் கூடங்­க­ளும், ‘கொதிக்’ சிற்­பப் பாணி­யில் அமைந்த தேவா­ய­ல­ய­மொன்­றும் இந்த நகரை அலங்­க­ரிக்­கின்­றன. கற்­க­ளா­லான தெருக்­கள், இங்­கி­லாந்­துக்­கு­ரிய பிரத்­தி­யேக மது அருந்­தும் நிலை­யம் போன்­ற­ன­வற்றை உள்­ள­டக்­கிய இந்த நக­ரம், 2006ஆம் ஆண்­டில் கட்டி முடிக்­கப்­பட்டது. நடுத்­தர வர்க்­கத்­தி­னர், தமது திரு­மண வைப­வத்­தின்­போது, ஆங்­கி­லே­யப் பட்­டி­னப் பின்­ன­ணி­யில் ஒளிப் பட­மெ­டுக்க இங்கே வந்து போகி­றார்­கள்.

‘அப்­பி­ளும்’ அகப்­பட்­டது
‘அப்­பிள்’ தயா­ரிப்­புக்­கள் உல­கப் புழ்­பெற்­றவை. அதைக்­கூட சீனா விட்­டு­வைக்­க­வில்லை. 2011ஆம் ஆண்­டில் அச்­சொட்­டாக அங்கு ஓர் அப்­பிள் விற்­பனை நிலை­யம்! ஒரு புள்ளி விவ­ரத்­தின்­படி ஸென்­ஸென் என்று அழைக்­கப்­ப­டும் தென் சீன நக­ரம் ஒன்­றில் அலு­வ­ல­க­ரீ­தி­யாக ஓர் அப்­பிள் விற்­பனை நிலை­ய­மும், ஐந்து அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அப்­பிள் விற்­பனை நிலை­யங்­க­ளும் இருக்­கின்­றன.

ஆனால் இங்­கே­யும் பல நகல்­கள் நங்­கூ­ர­மிட்­டுள்­ளன. இப்­ப­டி­யாக இங்கு 30க்கு மேற்­பட்ட அப்­பிள் விற்­பனை நிலை­யங்­கள் உள்­ளன என்­கி­றார்­கள்.

பல பிர­பல்­ய­மான உலக உற்­பத்­திப் பொருள்­க­ளின் பெயர்­க­ளைக் கள­வா­டும் இவர்­கள், அச­லான, பெய­ரில் போலி­யான உற்­பத்­தி­க­ளைச் சந்­தைக்கு விடு­கி­றார்­கள். இத­னால் அந்த நிஜ­மான ‘பிராண்ட்’ உற்­பத்­தி­யா­ளர் பெரும் பாதிப்­பைக் காண்­கி­றார். சீனப் போலி­கள் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வரு­டாந்­தம் 20 பில்­லி­யன் டொலர் பெறு­ம­தி­யான இலா­பத்தை இழக்­கச் செய்து வரு­வ­தாக ‘நோர்த் பேஸ்’ என்ற பிர­பல்ய நிறு­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் சுட்­டிக்­காட்­டு­கி­றார். சந்­தை­யில் உலா­வு­வ­தில் 70வீத­மா­னவை போலி­க­ளா­கவே இருக்­கின்­றன என்று இவர் ஆதங்­கப்­ப­டு­கி­றார்.

இலங்­கை­யில் இதன் தாக்­கம்
முன்பு குறிப்­பிட்ட ஸென்­ஸென் என்ற சீன நக­ரம் ஹொங்­ஹொங்­கின் எல்­லை­யில் இருக்­கின்­றது. ஏ.பி.சி. செய்தி நிறு­வ­னம் இங்கு பய­ணம் செய்தபோது, பெரு­வா­ரி­யான போலி உற்­பத்­தி­களை நேரில் கண்டு அதிர்ந்து போயி­ருக்­கி­றது. ‘போட்­டோ­ஸொப்’, ‘வின்­டோஸ்’ போன்ற கணனி மென்­பொ­ருள்­க­ளைச் சந்தை விலை­யில் பத்­தி­லொரு வீதம் குறைந்த பெறு­ம­தியை வழங்கி இங்கே வாங்க முடி­கின்­ற­தாம்.

இங்கு ‘யமஹா’ மோட்­டார் சைக்­கிள்­கள் விற்­ப­னை­யா­ கின்­றன. ஆனால் இதில் அதி­க­மா­னவை ‘யமஹா’ நிறு­வன உற்­பத்­தி­கள் அல்ல! ‘கில்­லட்’ சவர அல­கு­கள் ‘ஹெட் அன்ட் சோல்­டேர்ஸ்’ ஷம்பு விற்­ப­னைக்­குண்டு. மலி­வான விலை­யில். ஆனால், எல்­லாம் போலி­தான்.
வாகன உதி­ரிப் பாகங்­கள் குவிந்து கிடக்­கின்­றன.

ஆனால் அசல் இல்லை. சீனப் பொலி­ஸா­ரின் கண்­க­ளில் மண்­ணைத் தூவி­விட்டு, மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கும், ஆபி­ரிக்க, தென் அமெ­ரிக்க நாடு­க­ளுக்­கும் இந்­தப் போலி­கள் பறந்து போகின்­றன.

இதில் வேடிக்கை என்­ன­வென்­றால், இந்­தப் போலி­உற்­பத்தி பல மில்­லி­யன் வேலை வாய்ப்­பு­களை வழங்கி வரு­வ­தால் அதை இழுத்து மூட அர­சுக்கு விருப்­ப­மில்லை. எமது ஊர்களிலுள்ள கிரா­மப் பெண்­கள் பாய் இழைப்­பது, கயிறு திரிப்­பது என வீடு­க­ளில் சிறு கைத்­தொ­ழில்­க­ளில் ஈடு­ப­டு­வ­து­போ­லத்­தான் அங்­கு கைய­டக்­கத் தொலை­பேசி உட்­பட்ட பல இலத்­தி­ர­னி­யல் சாத­னங்­கள் சிறு கைத் தொழில்­க­ளா­கத் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

இலங்­கைக்­கும் சீனா­வுக்­கு­மான அர­சி­யல் உறவு கார­ண­மாக வர்த்­த­க­மும் சற்­றுப் பலப்­பட்­டி­ருக்­கி­றது. அண்­மைக்­கா­லங்­க­ளில் அதி­க­ள­வான சீன உற்­பத்­தி­கள் இலங்­கையை வந்­த­டைந்­தி­ருக்­கின்­றன. குறைந்த விலை­யில் அவை கிடைப்­ப­தால் அதி­கம் விற்­ப­னை­யா­கின்­றன. உங்­க­ளுக்கு உட­ன­டி­யா­கப் புரி­கிற உதா­ர­ணம் என்­றால், இப்­போது உங்­கள் கைக­ளில் இருக்­கிற, உட­லுக்கு ஆபத்தை விளை­விக்­கிற ‘சைனாப் போன்’களைச் சொல்­ல­ல­லாம்.

முன்பு சந்­தை­யில் இருந்த வியட்­நா­மிய ‘நொக்­கியா’ அதிக பாவ­னை­யும், உரிய தரத்­து­ட­னும் இருந்­தது. ஆனால் அதுவே தற்­போது சீனா­வின் பெய­ரில் இங்கு கிடைக்­கி­றது. இப்­ப­டிப் பல இங்கு சீன மய­மா­கி­விட்­டன. இவை பக்­க­வி­ளை­வு­களை அதி­க­மாக ஏற்­ப­டுத்­து­பவை. இருந்­தா­லும் இடை­யி­டையே வெறும் கண்­து­டைப்­பா­கச் செய்­தி­க­ளுக்­காக சில சிறிய தடை­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றன. பொன் முட்­டை­யி­டும் வாத்­தின் கழுத்தை அறுக்க, எவர் தான் சம்­ம­திப்­பர்?