சூரத்தில் நடக்க உள்ள சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போட்டி பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழக வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபராஜித் ஆகியோருக்கு பதிலாக புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணியில் அசத்திய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழக அணியை வழிநடத்த கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.