அது எல்லாம் பொய், சுத்தப் பொய் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவரவர் படங்களில் பிசியாகிவிட்டனர். ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்று படமான சாபக்கை தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார் தீபிகா. இந்நிலையில் தீபிகா கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியது.

நான் தற்போது கர்ப்பமாக இல்லை. அது நடக்கும்போது நடக்கும். திருமணம் முடிந்த உடன் கர்ப்பமாக வேண்டும் என்று பெண்களை கட்டாயப்படுத்தக் கூடாது. என்ன இன்னும் கர்ப்பமாகவில்லையா என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது. அது நியாயம் இல்லை. நான் தற்போது சாபக் படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதாபாத்திரம் என்றுமே என் மனதில் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.