தன் உடல் எடை தொடர்பாக அனுஷ்கா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றினார் அனுஷ்கா. அந்த பட வேலைகள் முடிந்த கையோடு எடையை குறைக்க அவரும் என்னவெல்லாமோ செய்தும் ஒன்றும் பலனில்லை.யோகா, உணவுக் கட்டுப்பாடு, ஜிம் என்று அனைத்தையும் முயன்றுவிட்டார். எடை குறைவதாக இல்லை.

குண்டாக இருக்கும் அனுஷ்காவை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கூப்பிட்டு ரசிகர்கள் கடுப்பேற்றுகிறார்கள். இளம் ஹீரோக்களோ அனுஷ்காவுடன் நடிக்க மறுக்கிறார்களாம். தனது உடல் எடையை பார்த்து ஆளாளுக்கு கேலி, கிண்டல் செய்வதை பார்த்தும் பார்க்காதது போன்று இருந்த அனுஷ்காவுக்கு தற்போது கோபம் வந்துவிட்டது.

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புகிறார் அனுஷ்கா. கடந்த சில ஆண்டுகளாக அவரும் பல பிரபல மருத்துவ மையங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துவிட்டார். இந்நிலையில் பாலிவுட்காரர்கள் எடையை குறைக்க எங்கு செல்கிறார்கள் என்பது தெரிய வந்து அங்கு கிளம்பிவிட்டாராம் அனுஷ்கா.

பாலிவுட்காரர்கள் ஆஸ்த்ரியாவுக்கு சென்று இயற்கை முறையில் சிகிச்சை பெற்று உடல் எடையை குறைக்கிறார்களாம். அதையே செய்ய அனுஷ்காவும் ஆஸ்த்ரியா சென்றுள்ளார். உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வந்து தன்னை கிண்டல் செய்தவர்களை எல்லாம் அதிர வைக்கப் போகிறாராம். புது அனுஷ்காவை பார்க்க அவரின் தீவிர ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

எடையை குறைத்துவிட்டு திரும்பி வந்த பிறகு கிடப்பில் உள்ள இரண்டு படங்கள் தொடர்பாக முடிவு எடுக்கப் போகிறாராம். இரண்டே வாரங்களில் தொப்பையை குறைத்து, பொலிவான தோலை பெற வைப்போம் என்று அந்த சிகிச்சை மையத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்களாம். அதுவும் தீவிர உணவுக் கட்டுப்பாடு இல்லாமல். அதனால் தான் பிரபலங்கள் ஆஸ்த்ரியாவுக்கு செல்கிறார்களாம். பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர், நடிகை பரினீத்தி சோப்ரா ஆகியோர் அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.