நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ள பக்திப் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் தெய்வங்களை முன்வைத்து நிறைய படங்கள் வெளிவந்தது. அதில் கே.ஆர்.விஜயா, ரம்யாகிருஷ்ணன், பானுப்பிரியா, ராதா, அம்பிகா உட்பட பலரும் தெய்வமாக நடித்தனர். ஆனால் இப்போதெல்லாம் அந்தமாதிரியான தெய்வங்களை சீரியல்களில் தான் காணமுடிகிறது.

இப்போது ஒரு ஸ்பெஷல் தகவல், அதாவது ஐயப்ப சுவாமியை பற்றி ஒரு படம் தயாராக இருக்கிறது. இந்த பக்திப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஆஸ்கார் நாயகன், இசைப்புயல், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்தப் பக்திப் படத்தை கோகுலம் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் தயாராக உள்ளது. பல பிரபலங்கள் நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறவுள்ளது.