அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்க கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். இன்று (15) தஜிகிஸ்தான், துஷன்பே நௌருஸ் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் (CICA) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.