பாராளுமன்றம் சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது

பாராளுமன்றம் சக்தி வாய்ந்த நிறுவனமாக மாறியிருக்கிறதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பொரளையில் வாகன பிரிவில் பொறுப்பதிகாரி வாகன விபத்தில் இறந்தமை முழு நாட்டுக்கும் கரும் புள்ளி சம்பவமாக அமைந்திருப்பதாக பிரதமர் சுட்டிகாட்டியுள்ளார்.

இந்த அனர்த்தத்தை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு வாகனத்தின் மூலம் பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓடி உள்ளதுடன் மற்ற வாகனம் அது தொடர்பாக அறிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் இந்த இரண்டு விடயங்களும் தவறானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தை இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து பிரதமர் உரையாற்றினார். மக்களின் ஆணைக்குழு அமைவாக பாராளுமன்றம் செயற்படுகிறது. வாக்காளர்களுக்கு மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், மீயுயர் நீதிமன்றங்கள், அமைச்சரவை, பாராளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உட்பட 25 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இன்று விவாதிக்கப்படுகிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.