அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – 04 நீதவான் நீதிமன்ற நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா முன்னிலையில் சந்தேகநபர் இன்று காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (13) பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ முச்சந்தியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மையுடன் செயற்பட்ட குற்றச்சாட்டில் மஹீல் தெஹிதெனிய கைது செய்யப்பட்டார்.

தீவிரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்