ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை எப்போதும் இருக்க தான் செய்யும். அவற்றின் பயன்களை நம்மில் பலர் அறிந்திராமலே இருக்கின்றோம். ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் பலவித மாயாஜாலங்கள் நடக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கங்கை நீரை முன்பெல்லாம் நாம் அதிக மகத்துவம் பெற்ற நீரின் வரிசையில் வைத்திருந்தோம். அதே போன்று தான் ஒரு சில பழங்களின் கலவையால் உண்டான நீரும் ஏராளமான நலன்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. இதில் எலுமிச்சை மற்றும் அன்னாச்சி ஆகிய பழங்கள் அடங்கும். இவை இரண்டின் சாற்றை நீருடன் கலந்து குடித்தால் உங்களின் உடலில் நடக்கும் மாற்றங்கள் பல.

எலுமிச்சை மற்றும் அன்னாச்சியில் கார தன்மை(alkaline) இயற்கையாகவே இருப்பதால் இவை புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றதாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏனெனில், அல்கலைன் அளவு அதிகம் கொண்ட உடலில் புற்றுநோய் செல்கள் உயிர் வாழ இயலாதாம்.

தேவையற்ற உணவு பழக்கத்தாலும், அன்றாட பழக்க வழக்கங்களாலும் நாம் நமது ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கத்தையும் சீர் அழித்து கொண்டே வருகின்றோம். அதில் உங்களது கிட்னியும் முதன்மையான இடத்தில் உள்ளது. கிட்னியில் ஏற்படுகின்ற கற்களை கரைய வைக்கின்ற தன்மை இந்த அன்னாச்சி எலுமிச்சை நீருக்கு உள்ளது.

இன்று பலர் அவதிப்படுகின்ற பிரச்சினைகளில் இந்த செரிமான கோளாறும் ஒன்று. பதில் 4 பேருக்கு இந்த பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. செரிமான பிரச்சினையை தீர்க்க இந்த எலுமிச்சை மற்றும் அன்னாசி சேர்த்த நீரே போதும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி விடும்.

உடல் எடை கூடி விட்டதே என அவதிப்படுவோருக்கு ஒரு எளிமையான வழியை தருகிறது இந்த அன்னாச்சி, எலுமிச்சை நீர். இவை இரண்டின் கார தன்மை உங்களின் எடையை குறைக்க பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தையும் இது குறைத்து விடும்.

உடலில் நோய்கள் நம்மை தாக்குவதற்கு காரணம் எதிர்ப்பு சக்தி குறைபாடுதான். இதனை எளிமையாக உயர்த்துகிறது இந்த நீர். இந்த இரு பழத்திலும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். எனவே, நோய்கள் உங்களை அண்டாமல் பார்த்து கொள்ளும்.

இந்த நீரானது ஒரு வித மூலிகை நீராக கருதப்படுகிறது. இவற்றை ஆயுர்வேத நீராகவும் ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றை குடித்து வருவதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும், உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோர்க்கும் இது சிறந்த தீர்வை தரும்.

பலருக்கு நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆசையை நிறைவேற்ற ஒரு அற்புத வழி உள்ளது. அதுதான், இந்த நீர். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் முகத்தின் செல்கள் புத்துணர்வு பெற்று இளமையான அழகை நீண்ட காலம் தரும்.

பற்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட என்னென்னமோ செய்வார்கள். ஆனால், பல் வலியை மிக விரைவாக போக்குவதற்கு இந்த நீர் ஒன்றே போதுமாம். பல் வலிகளில் இருந்து நிவாரணம் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.