அப்பாவின் ஆசைக்காக சினிமாவில் இருந்து விலகும் முன்னணி நடிகர்

12116

முன்னணி நடிகர் ஒருவர் தனது அப்பாவின் ஆசைக்காக சினிமாவில் இருந்து விலக இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்திருக்கிறார்களாம். அவர்களைத் தொடர்ந்து, முன்னணி வாரிசு நடிகர் ஒருவரும் விரைவில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட இருக்கிறாராம்.
விராலாயே பல வித்தைகளை செய்யும் அந்த நாயகனை பற்றி சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள் வலம் வருமாம். நாயகன் தற்போது சிவப்பாக இருக்கும் வானம் படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தை முடித்த பிறகு, நாயகன் அரசியலில் ஈடுபட இருக்கிறாராம். அடுக்கு மொழி வசனங்களை பேசும் நாயகனின் அப்பா, நாயகனை எப்படியாவது அரசியலில் பெரிய ஆளாக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
சமீபத்தில் கூட தண்ணீர் பிரச்சனையில் நாயகன் கொடுத்த குரலுக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதனால் மகிழ்ச்சியடைந்த நாயகனின் தந்தை, நாயகனை எப்படியாவது சீக்கிரமாக அரசியலில் இறக்கி திட்டம் போட்டு வருகிறாராம்.
நாயகனும் தந்தையின் சொல்லுக்கு ஓ.கே. சொல்லிவிட்டாராம். அப்படின்னா நாயகன் இனிமேல் படத்தில் நடிக்க மாட்டாரா? என்று சிலர் கேட்க, அது கூடிய சீக்கரமே தெரிய வரும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். நடிகருக்கு இதெல்லாம் செட்டாகாது என்றும் சிலர் கூறுகிறார்களாம்.