பனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் அதன் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஏவுகணைகளை ரஷ்யாவும் தயாரிக்கத் தொடங்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் எச்சரித்திருக்கிறார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்கெனவே மீறிவிட்டது என செவ்வாய்க்கிழமை நேட்டோ குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து  இந்த கூற்று வந்துள்ளது.

1987ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் குறுகிய மற்றும் இடைநிலை தாக்குதல் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டன.

அமெரிக்கா இந்த ஒப்பந்த்த்தை விட்டு வெளியேறுவதற்கான பூர்வாங்க குற்றச்சாட்டுதான் இதுவென  தெரிவித்திருக்கிறார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை பல நாடுகள் தயாரித்துள்ளதாக தொலைக்காட்சி உரையில் ரஷ்ய அதிபர்  கூறியுள்ளார்.

“தற்போது நிலைமைகள் மாறிவிட்டன. எனவே, இது போன்ற ஆயுதங்களையும் நாம் வைத்துகொள்ளலாம் என்று நமது அமெரிக்க பங்காளிகள் நம்புவதுபோல தெரிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.