அரசியல் அமைப்பு விடயத்தில் திரையை மூடுவதற்கான சந்தர்ப் பம் இன்னும் வரவில்லை. இந்த அரசாங்கத்தால் அதை செய்ய வேண்டும் என்பதற்காக அரசாங்க த்திற்கு முண்டு கொடுத்தோம்.
 ஆனால் தொடர்ந்தும் இழுபட் டுக் கொண்டு போகமுடியாது என த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாட் டினை தெளிவுபடுத்தினார் த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அக் கட்சியின் ஊட கப் பேச்சாளருமானஎம். ஏ.சுமந்திரன்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி பகு தியில் உள்ள இளைஞர்களை சந்தித்து கல ந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகை யில்;, போர் முடிந்த பின்னர் இந்திய அரசு, வேறு அரசு, மற்றும் மகிந்த அரசுடனும் பேசினோம்.
மகிந்த அரசுடன் 18 சுற்று பேச்சு நடத்தி னோம்.
மகிந்த அரசை மாற்றி வேறு அரசு ஒன்றை கொண்டுவந்த போது ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை.
ஏனெனில் ஒப்பந்தம் செய்தால் மைத்திரி தோற்று மகிந்த வென்று விடுவார் என்பத னால் ஒப்பந்தம் செய்யுமாறு சந்திரிகா கோரிய போதும் சம்பந்தன் ஐயா ஏற்கவில்லை.
இந்த நாட்டின் ஜனாதிபதியாகவே மைத் திரியை நியமித்தோமே தவிர சு.க.தலை வராக அல்ல என்றார்.
அரசியல் அமைப்பு விடயத்தில் சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்டது நல்லது. ஆனால் இப்போது நாங்கள் கொண்டுவர இருப்பது அதனை அண்மித்தது.
அன்று அதை எதிர்த்தோம் இன்று அதை அண்மித்ததிற்காக ஏங்குகின்றோம்.
கால சூழ்நிலை சுபாவத்திற்கு ஏற்றவாறு நடக்க வேண்டும்.
அரசியல் அமைப்பு விடயத்தில் நாங்கள் வெளியேறாது நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
இருப்பினும் திரும்பவும் போராட்டம் ஒன்று ஏற்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படு மாயின் தமிழர்கள் இந்த நாட்டிலே வாழமுடி யாத சூழல் ஏற்படும் என்றார்.