அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது என சீனாவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மொழி, இனம், மதம் என பிரிவினை பேசும் கட்சிகளும் தலைவர்களும் அதிகரித்து வருகின்றனர். அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்திய உள்நாட்டு பிரிவினையையே விரும்புகின்றன.

அருணாசல பிரதேசத்தை சீனா தனதாக்கிக்கொள்ள முயன்று வருகிறது. இதனை எதிர்த்து பாஜ., குரல் கொடுத்து வருக்கிறது.

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இது சீனாவின் கண்ணை உறுத்தியுள்ளது. பிரதமர் மோடி அருணாச்சலப்பிரதேசம் சென்றதை கண்டித்துள்ள சீனா, இந்தச் செயலானது இருநாடுகள் இடையே மோதல் போக்கை விரிவாக்கி விடும் என்று கொக்கரித்தது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெளியுறவுத்துறை, அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இதை எப்போதும் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.