தான் பயன்படுத்திய அழுக்கு சாக்ஸை இணையத்தில் விற்று, ஆண்டுதோறும் சுமார் ரூ. 98 லட்சம் சம்பாரித்து வருகிறார் ரொக்ஸி சைக்ஸ் எனும் பெண். வித்தியாசமானப் பொருட்களை வாங்குவதற்கென்றே விசித்திர ரசனை படைத்த குரூப் ஒன்று உள்ளது. இவர்களின் விருப்பத்திற்கேற்ப பலர் நாம் குப்பையில் தூக்கிப் போடும் பொருட்களை எல்லாம் விற்று வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தான் பயன்படுத்திய அழுக்கு சாக்ஸ்களை விற்று கோடீஸ்வரி ஆகியுள்ளார் ரொக்ஸி சைக்ஸ்

அழகான பாதங்களைக் கொண்டவர் ரொக்ஸி. அவரது தோழிகளின் புகழ்ச்சியால், தனது அழகிய பாதங்களை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து, அதனை தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார் அவர். நம்ப முடியாத அளவிற்கு அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தார் ரொக்ஸ்.

பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தான் பயன்படுத்திய ஷாக்ஸை இணையத்தில் 20 யூரோவிற்கு விற்றுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்புபடி சுமார் 1600 ரூபாய். இதற்கும் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தன் அழகிய பாதங்களில் அணிந்த சாக்ஸ்களை இணையத்தில் விற்பது என அவர் முடிவு செய்தார்.

முதல் மாதத்தில் மட்டும் 2000 யூரோவிற்கு தனது பயன்படுத்தப்பட்ட ஷாக்ஸ்களை விற்று பணம் சம்பாதித்துள்ளார். கடந்த 8 வருடங்களாக இதே தொழிலை செய்து வரும் ரொக்ஸி சைக்ஸ் தற்போது மாதம் 8000 யூரோ அதாவது கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் என ஆண்டிற்கு 98 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வருகிறார் .