ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு, அவரது மகள்கள் பசு மாட்டை பிறந்தநாள் பரிசாக கொடுத்து, அவரை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். கிரி, ஏழுமலை, ஜெயஹிந்த், முதல்வன், ஜென்டில்மேன் உள்ளிட்ட பல அதிரடி ஆக்ஷன் படங்களில் ஹீரோவாக கலக்கியவர் அர்ஜுன். ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுன் தற்போது, விஜய் ஆண்டனியுடன் கொலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜுன் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அப்போது, அவரது மகள்களான ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா ஆகியோர், அவருக்கு பிறந்தநாள் பரிசாக குஜராத்திலிருந்து விஷேச பசுமாடு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

நடிகர் அர்ஜுன், அந்த பசுமாட்டுடன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.