ஆசிரியர், அதிபர் சங்கங்களின் தொழிற்சங்க போராட்டத்தால் எதிர்காலத்தில் நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்க கூடிய மாணவர்களே பாதிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொரண பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளை தெளிவுபடுத்த போராட்ட காரர்களுக்கு வேறு வழி இல்லாமையால் இவ்வாறான தொழிற்சங்க போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான பல போராட்டங்களுக்கு மத்தியிலும் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களின் துன்பங்களை அறிந்துக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.