உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகின்றது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு. தற்போது ஆண்ட்ராய்டு இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று கூறலாம்.

எந்த நிறுவனமும் ஆண்ட்ராய்டுடன் போட்டி போட முடியாத நிலையில் இருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குளத்திலும் கலக்குகின்றது.இந்நிலையில், தற்போது, தனக்கென்று கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டுக்கும் பாய் சொல்லி, டிரம்ப்க்கும் அல்லா கொடுத்து வந்து விட்டது ஹூவாய் நிறுவனத்தின் இயங்குதளம்.

இன்றயை உலகில் பல்வேறு தரப்பினர்களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் மொபைல் இயங்குதளங்கள் தான் தனது சர்வதிகாரத்தை காட்டி வருகின்றன.

மொபைல் போன் சந்தையில் பொதுவமாக கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குளத்தையே பயன்படுத்தி வருகின்றன மற்ற நிறுவனங்கள். தங்களுக்கு என்று தனி இயங்குதளம் கூட இல்லாமல் இருக்கின்றன. இதுவரை கூகுள் நிறுவனத்தின் இருந்து, ஆண்ட்ராய்டு இயங்குளத்தை ஹூவாய் நிறுவனமும் பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தக போர் ஏற்பட்டது. அப்போது, அமெரிக்காவின் எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த கூடாது என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக சீனா தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இதனால், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்துவதை நிறுவத்துவதாக அறிவித்தது.

உலகில் தொலைத் தொடர்பு மற்றும் 5 ஜி சேவைகளையும், செல்போன்களையும் விற்று வரும் ஹூவாய் முன்னணியாக திகழ்கின்றது. இந்நிலையில், அதிபர் டிரம்புக்குக்கும் கூகுள் நிறுவனத்தை எதிர்த்தும் சொந்தமாக இயங்குளத்தை உருவாக்க முனைப்பு காட்டியது. மேலும், கூகுள் நிறுவனம் சிறிது காலம் தனது ஹூவாயிக்கு இயங்குதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது.

புதிய இயங்குதளம் HongmengOS என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகின. சீனாவின் Dongguan நகரத்தில் நடந்த டெவலப்பர் மாநாட்டில் தனது புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்தது ஹூவாவே. 2 மாதம் குறைவான காலத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் புதிய இயங்குதளம் ஹார்மனி (HarmonyOS) என்று உருவாக்கி சாதித்திருக்கிறது ஹுவாய்.