ஒரு கிராமத்தின் உண்மை கதை

மன்னார் நகர் நிருபர்

சமூக ரீதியில் மாத்திரம் இல்லாமல் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக அரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை கிராம மட்டங்களின் இருந்து நடை முறைபடுத்தி வருகின்றனர்

சமூக மட்டத்தில் நகரங்களில் பெண்களின் பொதுவான பங்களிப்பானது முந்தைய நூற்றாண்டுகளை விட அதிகரித்து காணப்படுகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்

அரசியல் பொருளாதாரம் கல்வி அறிவியல் விளையாட்டு என அனைத்து துறைகளிளும் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் இல்லை என்பதே உண்மை

ஆனாலும் இவ் நிலை எல்லா இடமும் இல்லை என்பதே அதைவிட உண்மை

இன்னமும் பல நாடுகளில் ஏன் எமது நாட்டிலும் பல பகுதிகளில் பல கிராமங்களில் பெண்களை அடிமையாக நடத்தும் கலாச்சாரம் காணப்படுகின்றமை கசப்பான உண்மையாகும்

பல பிந்தங்கிய கிராமங்களில் பெண்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டு குடும்பத்தை பராமரிக்கும் சாதாரண வேலையாளாகவே பார்க்கப்படுகின்றனர்

பெண்கள் எத்தனை திறமைகளை தன்னகத்தே கொண்டாலும் பெண் என்ற காரணத்தினாலோ ஏனோ என்னும் ஆண் ஆதிக்க சமூகத்தில்; ஆரம்ப நிலையிலே இருக்கின்றனர்

அதிலும் குறிப்பாக யுத்ததிற்கு பின்னர் வடக்கு கிழக்கு பெண்களின் சமூக நிலை பாரிய மற்றம் அடைந்தது
பல பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகியது

பெண்களே உழைப்பாளிகளாகவும் சமூகத்தில் பல சவால்களை தாங்கிய போராளிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளனர்

அதே நேரத்தில் யுத்தத்தின் பாதிப்பு நுண்நிதி எனும் பாரிய கடன் சுமைக்குள் பெண்களை தள்ளியுள்ளது
தனி ஒருவரின் உழைப்பு குடும்பத்தை பொருளாதார ரீதியில் கொண்டு செல்ல போதாத நிலையே பெரும்பாலும் காணப்படுகின்றது

அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் சில கடலோர கிராமங்களில் பெண்கள் செய்யக்கூடாது என மறுக்கப்பட்ட சில தொழில்களை பெண்கள் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்

அவ்வாறன ஒரு கிராமத்தின் கதையே இது

மன்னார் மாவட்டத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் எல்லை பகுதி கரையோர கிராமமான வலைப்பாடு கிராமம்

கடல் தொழிலையே பிரதான ஜீவனோபாய தொழிலாக கொண்ட இக் கிராமம் மற்றைய கிராமங்களைவிட சற்று வித்தியாசப்படுகின்றது
இக் கிராமம்

எவ்வாறு வித்தியாசப்படுகின்றது

இவ் கிராமத்தில் யுத்ததிற்கு பின்னர் அனேக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகின பெண்கள் எதோ ஒரு விதத்தில் தலைமைத்துவத்தை தொழில்ரீதியாகவும் பொருளாதர ரீதியாக ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது

அதனால் இவ் கிராமத்தை சேர்ந்த அனேக பெண்கள் ஆரம்பத்தில் நுண்நிதி நிறுனங்களிடம் பணம் பெற்று கடனாலிகளாக மாறினார்கள்

இருப்பினு தற்போது இப்பெண்கள் எந்த கடன் சுமையும் இல்லாமல் முதலாளிகலாக மாறியுள்ளனர்

வழமையாக எல்லா மீனவ கிராமங்களிலும் மீனவ சங்கங்கள் காணப்படும் ஆனாலும் அவ் சங்கங்களில் பெறும்பாலும் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை ஆனால் வலைப்பாட்டு கிராமத்தின் நிலைமையோ வேறு இங்குள்ள சங்கத்தில் பெண்கள் சாதாரன உறுப்பினர்களாக மட்டும் இல்லாமல் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாக உறுப்பினர்களாகவும் உள்ளனர்

அதே நேரத்தில் இங்குள்ள பெண்கள் படகு மற்றும் இயந்திரங்களை சொந்தமாக வைத்து தாங்களே கடற்தொழில்களில் ஈடுபடுகின்றனர்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வலைப்பட்டு மீனவசங்க நிர்வாக உறுப்பினரும் பெண்தொழிளாலியுமான உதயசீலன் ஜொய்சி
நான் பல வருடங்களாக எமது கிராமத்தில் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றேன் எமது கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் மீன் பிடியையே செய்கின்றனர் ஆனாலும் மீன் பிடியை பொறுத்தவரையில் அது ஒரு ஆண் ஆதிக்க தொழிலே ஆனாலும் எமது கிராமத்தில் நான்கு ஐந்து ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது இது வரை கடற்கரைக்கு அனுமதிக்கபடாத பெண்கள் தற்போது ஆணுக்கு சமமாக இங்கு கடற்தொழில் ஈடுபட்டு வருகின்றனர்
அதே நேரத்தில் ஆண்கள் கூட செய்யாத பாசிவளர்பு மற்றும் இயற்கையான முறையில் அட்டை பிடித்தல் போன்ற தொழில்களையும் பெண்களாகிய நாங்கள் மேற்கொள்கின்றோம் அதை விட கருவாடுபதணிடல் நண்டு உற்பத்தி நிறுவனதில் அதே நேரம் நண்டு பிடித்தலிலும் ஈடுபடுகிறோம்

இவ்வாறாக நாங்கள் ஒரு முன்னோற்ற பாதையில் செல்வதற்கு எங்கள் சமூகத்தில் உள்ள ஆண்களின் ஒத்துழைப்பினாலே இது சாத்தியமானது என்பது உணமையாகும் என தெரிவித்தார்

அதே நேரத்தில் ஆரம்ப காலங்களில் நாங்கள் பெண்களை கடலுக்கு அனுமதிப்பதில்லை பெண்கள் எயங்களது படகுகளுக்கு வந்தாலே அன்று மீன்கள் பிடிபடாது என அவர்களை அபசகுனமாக கருதிய நாட்களும் உண்டு என வலைப்பாடு மீனவ சங்க தலைவர் தெரிவித்தார்

மேலும் பெண்கள் பொது விடயங்களில் ஈடுபடுவது மிகவும் குறைவு ஆண்கள் அவ்வாறான பொது விடயங்களில் ஈடுபட பெண்களை அனுமதிப்பது அதைவிட குறைவு எனவே தான் நாங்கள் எங்கள் சங்கத்தில் பெண்களை இணைப்பதற்காக எங்கள் சங்க யாப்பிலே மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்
காரணம் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்தில் நாங்க ஆண்கள் பெண்கள் எங்களுக்கு தேவை இல்லை என்ற இருமாப்புடனே வாழ்ந்து வந்தோம் பெண்கள் படகில எறினாலே தொழில் நடக்காது என்று சொன்ன காலங்களும் உண்டு என்னுடைய மனைவிக்கே ஆரம்பத்தில் என் படகின் நிறம் தெரியாது ஆனால் தற்போது பெண்கலே கடலுக்கு வந்து கணவணுடைய படகில் உள்ள மீண்களை தெரித்து விற்பனை செய்யும் அளவிற்க்கு சமமான உரிமையை கொடுத்துள்ளோம் எனி எப்போதும் பெண்களை எமது பங்காளியாகவே கருதுவோம் என தெரிவித்தார்

எல்லாவற்றையும் விட வலைப்பாடு கிராமத்தில் கடல் தொழிலில் அட்டை பிடிதொழிலில் பாசிவளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அவர்களுடைய கணவன்மார் உணவு சமைத்து கடற்கறைக்கு கொண்டு வந்து வழங்குவதை கூட காணக்கூடியதாக உள்ளது

பல பெண்கள் வறுமை காரணமாக கழுத்தளவு தண்ணீரில் கடல் அட்டை பிடிக்கின்றனர் ஒரு வேளை உணவுக்காக நடுக்கடலில் பாசி வளர்கின்றனர்

எது எவ்வாறோ ஒரு ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண் எழிச்சி அடைய வேண்டும் என்றால் தனி ஒரு பெண்ணாலே பெண் அமைப்புக்கலாலே அது எப்போது முடியாது ஆண் எனும் கர்வத்தை விட்டொதுக்கும் ஆண் சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றி அணு அளவும் மாற்றம் கொண்டுவர முடியாது

மாதவிடாய்காளத்திலே பெண்களை ஒதுக்கி வைக்கும் இந்த சமூகத்திலே மாதம் முழுவதும் பெண்களை தங்கள் பங்காளியாய் மதித்து தமக்கு சமமாக நடத்து இவ்வாறான கிராமங்களை சேர்ந்த ஆண்களை போன்று எல்லா கிராமங்களை சேர்ந்த ஆண்களும் மாறும் போதே ஆண்டாண்டு காலம் நாம் பேசி வரும் பெண்சுகந்திரம் பெண்விடுதலை சாத்தியப்படும் என்பதே நிதர்சணமான உண்மை

ஜோசப் நயன்