செப்டம்பர் 10 ஆம் தேதி நடக்கவுள்ள ஆப்பிள் நிகழ்ச்சியில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் ஐபோன் 11 மாடல் ஐபோன் மற்றும் புதிய டைட்டானியம் செராமிக் ஆப்பிள் வாட்ச்களை அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி அடுத்த சில வாரங்களில் நிகழ உள்ள நிலையில், பல புதிய லீக் தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. அதில் இன்று கசிந்துள்ள தகவலின் படி ஆப்பிள் தனது நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்துடன் பல புதிய சாதனங்களையும் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் கசிந்துள்ளது.

பிரேசிலின் வலைத்தளமான iHelp.br தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, watchOS 6 beta சேவையுடன் புதிய செராமிக் டைட்டானியம் ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பிள் வாட்ச், முன்பு வெளியான ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் அளவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்பு அதன் ஆப்பிள் வாட்ச் 2 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் வாட்ச்களில் செராமிக் கேசிங் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் இல் செராமிக் வாட்ச்கள் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்போகும் ஆப்பிள் வாட்ச், புதிய ஆப்பிள் 5 சீரிஸ் வாட்ச்சாக இருக்கலாம் அல்லது ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் இன் புதிய வடிவமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.