ஆறு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள மனு- நாடாளுமன்றில் விவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமென்ற மனுவில் ஆறு மில்லியன் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் குறித்த மனு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

E-petitions தளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 50-ஆம் உறுப்புரை கோரல் மனு மிகவும் பிரபலமடைந்துள்ளது.

இது தவிர மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதிய வாக்கெடுப்பு கோரிரூபவ் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களுடன் ஒரு மனுவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு முடிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களுடன் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன.

50 உறுப்புரிமை சட்டபூர்வமான வழிமுறையாகும். இதன் மூலம் பிரெக்சிற் நடைபெறுகிறது.

கட்டுரை 50ஐ அகற்றுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க முடியும்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் 50 ஆவது உறுப்புரிமையை ரத்து செய்யாது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தும் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு பணியாற்றும் என்றும் அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு திரும்பப் பெறும் மனு கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு நாடாளுமன்றில் விவாதிக்கப்பட வேண்டிய மனுவாக மாற்றம் பெற்றது.

கடந்த மார்ச் 23 ஆம் திகதியளவில் மனுவில் நான்கு மடங்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.