இங்கிலாந்து அரசின் திட்டம் குறித்த இரகசிய தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கெவின் வில்லியம்சனை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி நீக்கியுள்ளார்.

சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமாக ஹூவாய் மூலமாக இங்கிலாந்தில் 5பு என்னும் 5 ஆம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையை வழங்க பிரதமர் தெரசா மே-இன் அரசு திட்டமிட்டது.

இந்த நிலையில், இந்த திட்டம் குறித்த அரசின் உயர்மட்ட இரகசிய தகவல்கள் தேசிய பாதுகாப்பு சபை வாயிலாக கசிந்ததாக செய்திகள் பரவின.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில், அரசின் திட்டம் குறித்த இரகசியத் தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில்இ கவின் வில்லியம்சனை,பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து, Penny Mordaunt புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இங்கிலாந்தின் முதல் பெண் பாதுகாப்பு செயலாளர் என்ற சிறப்பையும் இதன் மூலம் பெற்றுள்ளார்.