எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நேற்றைய தினத்தினுள் (30) நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, புதிய சம சமாஜ கட்சியிலிருந்து பத்தேகமகே நந்திமித்ர கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து நம்புநாம நாணாயக்கார பல்லியகுருகே வஜிரபானீ விஜேசிறிவர்தன கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

நவ சிஹல உறுமய கட்சியின் சரத் மனமேந்திர நேற்று கட்டுப்பணம் செலுத்திய நிலையில், தேசிய அபிவிருத்தி முன்னணியிலிருந்து பல்லெவத்த கமராலலாகே ரொஹான் பல்லெவத்த கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்முறை ஜனாதிபதி ​தேர்தலுக்காக இதுவரை பதிவு செய்யப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயாதீன வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.