ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கே:- தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் அரசு விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ப:- இதற்கான அறிவிப்பை தமிழக அரசுதான் வெளியிட வேண்டும்.

கே:- நீங்கள் (தி.மு.க.) ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பீர்களா?

ப:- நாங்கள் ஆட்சிக்கு வருவோமா? என்பதற்கு இங்கு திரண்டுள்ள மக்களே சாட்சி.

கே:- இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதே?

ப:- இந்திய பொருளாதாரத்தின் 5 சதவீத வீழ்ச்சி தான் மோடி அரசின் 100 நாள் சாதனை.

இவ்வாறு அவர் கூறினார்.