ஒடிசா மாநிலம் மலகின்கரி பகுதியைச் சேர்ந்தவர் அனுபிரியா மதுமிதா லக்ரா(27). இவரது தந்தை காவல்துறையில் பணியாற்றி வருகிறார். அனுபிரியாவுக்கு சிறு வயது முதலே விமானத்தில் பறக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது.இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் விமானி என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார். இது குறித்து அனுபிரியாவின் தாய் கூறுகையில், ‘அவளை இந்த படிப்பில் சேர்க்க உறவினர்கள், வங்கி என அனைத்து இடங்களிலும் பணம் வாங்க கஷ்டப்பட்டோம்.

இப்போது அவள் சாதனையை நினைத்து பெருமை அடைகிறோம். அனைத்து பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற ஆதரவு தர வேண்டும். மற்ற பெண்களுக்கு அனு ஒரு முன்உதாரணமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறியுள்ளார்.

இதையடுத்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘அனுபிரியாவின் இந்த சாதனை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மற்ற பெண்களுக்கு அவர் சிறந்த முன்னோடியாக திகழ்வார்’ என பாராட்டியுள்ளார். இதேபோன்று பலரும் அனுவை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.