இந்த முள் சீதாப்பழத்தை கடைத்தெருக்களில் பார்த்திருப்போம். ஆனால் என்ன இந்த பழம் முள் முள்ளாக பார்க்கவே கொஞ்சம் அருவருப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. இதை எப்படி சாப்பிடுவது என்ற குழப்பமும் பயமும் வந்திருக்கும்.

நிறைய பேருக்கு இந்த பழத்தின் பெயர் கூட தெரிந்திருக்காது. இந்த பழத்தின் பெயர் முன் சீதாப்பழம். இந்த பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ஆயுர்வேத மூலிகை மருத்துவத்தில் இந்த முள் சீதாப்பழம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முள் சீதாப்பழம் நல்ல இனிப்பு சுவை கொண்டது. இது நம்முடைய உடலில் உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க உதவுகிறது. அதன் விளக்கமான பதிவை இங்கே பார்க்கலாம்.

முள் சீதாப்பழம் மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது. முள் சீதாப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். முள் சீதா மரத்தின் இலைகளைக் கொண்டு டீ போட்டு குடித்து வந்தால் மாரடைப்பை உண்டாக்கும்.

நம்முடைய உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கும் இந்த முள் சீதாப்பழம் உதவுகிறது. உடலில் அதிகமாக கொழுப்புத் திசுக்கள் தேங்கியிருக்கிற தொடை, வயிற்றுப்பகுதி, பிட்டப்பகுதிகளில் இருக்கின்ற கொழுப்பைக் கரைக்க உதவும்.

முள் சீதாப்பழம் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் மிகச்சிறந்த செயலாற்றுகிறது. புற்றுநோய் வருவதற்கு முன்பும் அதைத் தடுக்கும். புற்றுநோய் வந்த பிறகும் அந்த புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகவுமு் இருக்கிறது.

இந்த முள் சீதாவில் அதிக அளவில் ஆன்டிஅசிடோன் இருப்பதால், உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

முள் சீதா இலைகளை டீயில் போட்டு குடித்து வந்தால் புற்றுநோய் தாக்கம் குறையும்.

இந்த பழம் தான் அதிக இனிப்பாக இருக்கும் என்றால் இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் வரும். அந்த கவலையெல்லாம் இனி தேவை இல்லை.

சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இந்த முள் சீதாப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த பழம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.