இந்தாண்டின் ஆகச்சிறந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும், அடுத்து சில வாரங்களில் நிகழவுள்ள IFA 2019-ல் அறிமுகமாக உள்ள நிலைப்பாட்டில், அந்நிகழ்வில் எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்பது சார்ந்த லீக்ஸ்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.

அந்த நீண்ட பட்டியலில் தற்போது நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்று “மீண்டும்” இணைந்துள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? வெளியான புதிய லீக்ஸ் விவரங்கள் என்ன? அதன் பிரதான அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன? இந்தாண்டு ஒரே ஒரு நோக்கியா ஸ்மார்ட்போன் தான் வெளியாகவுள்ளதா? என்பதை பற்றியெல்லாம் அறிய தொடர்ந்து படிக்கவும்.

இன்று ஒரு தற்செயலான ட்வீட் ஆனது வரவிருக்கும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் கேமராக்கள், வடிவமைப்பு மற்றும் வெளியீட்டு தேதி போன்ற விவரங்களை வெளிப்படுத்தியது. இந்த ட்வீட் பதிவானது வெளியிடப்பட்ட சில நேரங்களிலேயே டெலிட் செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அது உடனடியாக டெலிட் செய்யப்பட்டாலும் கூட அதன் வழியாக காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் நம்முடன் தங்கியது. அதன்படி, இந்த படம் நோக்கியா 7.2 பற்றிய இரண்டு விவரங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, இது ZEISS ஆப்டிக்ஸ் கொண்ட வட்ட வடிவிலான பின்புற கேமரா பம்பில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. அந்த கேமராக்களுக்கு அடியில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது.

இந்த ட்வீட்டின் அடிப்படையில், இவ்வகையான கேமரா அமைப்பிலிருந்து சில “மிகப்பெரிய” புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு திறனை நாம் எதிர்பார்க்கலாம். ஐஎஃப்ஏ 2019 நிகழ்வை பொறுத்தவரை, நோக்கியா போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல், அதன் புதிய ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 5 ஆம் தேதி பெர்லினில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது

இதற்கு முன்னதாக வெளியான லீக்ஸ் புகைப்படமானது, கூறப்படும் நோக்கியா 7.2 ஆனது அதன் பின்புறத்தில் ஒரு வட்ட வடிவிலான கேமரா அமைப்பை மட்டுமின்றி மெல்லிய வடிவமைப்பையும் காட்சிப்படுத்தியது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை காண முடிகிறது.