காலையில் கண் விழித்ததுமே, நேற்று இரவு பேஸ்புக்கில் பதிவிட்ட போட்டோவிற்கு எத்தனை லைக்ஸ்கள் வந்துள்ளன என்பதை பார்த்து பார்த்து ஆசுவாசப்படும் “லைக் விரும்பிகளில்” நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கு இந்த தகவலானது “கரண்ட் கம்பியில் கை வைத்ததை போல” இருக்கலாம்!

கடந்த ஜூலை மாதத்தில், பிரபல புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்க ஒரு உதவும் அம்சம் / விருப்பம் அறிமுகமானது.

“இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்பவர்கள் (ஃபாலோவர்ஸ்) நீங்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, அது எத்தனை லைக்ஸ்களை பெறுகிறது என்பதில் அல்ல” என்கிற வாதத்தின் கீழ் தான் கூறப்படும் Like-Hiding அம்சம் அறிமுகமானது. இந்த அம்சமானது / விருப்பமானது இன்ஸ்டாகிராம் வாசிகளின் மத்தியில் நேர்மறையான கருத்துக்களை பெற்றதாகத் தெரிகிறது. எனவே, அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கும் இந்த “லைக்-ஹைடிங்” விருப்பத்தினை உருட்டலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலானது – பேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு ஆப்பில் காணப்பட்ட Source code மாற்றத்தின் அடிப்படையின் கீழ் – ரிவர்ஸ் என்ஜினீயரிங் வல்லுநர் ஆன ஜேன் வோங்கிடமிருந்து நமக்கு கிடைத்துள்ளது.

பேஸ்புக்கின் இந்த லைக்-ஹைடிங் அம்சம் ஆனது இன்ஸ்டாகிராமிற்கு ஒத்ததாகவே செயல்படுகிறது. இதனை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் போஸ்ட் செய்பவரால் மட்டுமே குறிப்பிட்ட போஸ்டின் மொத்த லைக்ஸ்களை பார்க்க முடியும். மற்றவர்கள் குறிப்பிட்ட போஸ்டை லைக்ஸ் செய்த பரஸ்பர நண்பர்களின் பெயரை மட்டுமே பார்க்க முடியும்.