கூகுள் நிறுவனம் தனது ‘கூகிள் ஃபார் இந்தியா’ (‘Google for India’) நிகழ்வில் கூகுள் அசிஸ்டென்ட் பயனர்களுக்கு ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்தது. பயனர்கள் இப்போது கூகுள் அசிஸ்டென்ட்-ல் தமிழ், இந்தி குஜராத், தெலுங்கு, உருது, பெங்காலி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளுக்கும் கட்டளையை வழங்கலாம். கண்டிப்பாக இது சரியான சமயத்தில் வழங்கப்பட்ட அருமையான அம்சமாகும். இந்த புதிய வசதி அனைத்து மொழிகளிலும் வந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது தமிழில் என்னுடன் பேசுங்கள் என்று கேட்பதன் மூலம் கூகுள் அசிஸ்டென்ட் வசதியை தமிழில் பேச வைக்கலாம்.

பயனர்கள் இப்போது தமிழில் செய்திகளை கேட்கவேண்டும் என்றால், இந்த கூகுள் அசிஸ்டென்ட் வசதி மிகவும் அருமையாகஉதவு செய்யும். மேலும் தமிழிலும் கூகுள் செய்திகளை தெளிவாகப் பார்க்கவும் மற்றும் கேட்டகவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.