எரிபொருள் விலை சூத்திர நிர்ணய குழு இன்று இரவு கூடவுள்ளது. கடந்த 10ம் திகதி அரச விடுமுறை என்ற காரணத்தினால் இம்மாதம் 10ம் திகதி எரிபொருளின் விலையினை தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இன்று நள்ளிரவு எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜுலை மாதம் 10ம் திகதி எரிபொருள் விலை நிர்ணய சூத்திர குழுவின் தீர்மானத்திற்கு அமைய 92 ரக ஒக்டைன் பெற்றோலின் விலை 02 ரூபாவிலும், ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 05 ரூபாவிலும், சுபிரி டீசல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவிலும், குறைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.