எரிபொருட்களின் விலைகளை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல் 123 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 147 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் 99 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 118 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவற்றின் விலை குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியது.