இயற்கையின் மகோன்னதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. அதன் அற்புதம் சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியது. அப்படியானதுதான் இந்த புல் பாலமும்.

வெறும் புற்களை கைகளால் நெய்து செய்யப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இது அமைந்துள்ளது.

இன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோவால் 2013ம் ஆண்டு உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டது.