குடாநாட்டு மக்­கள் நின்­ம­தி­யான வாழ்க்­கைக்­காக ஏங்­கிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். இங்கு இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­க­ளால் மிகுந்த மன உளைச்­ச­லு­டன் அவர்­கள் இருப்­ப­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

ஒரு காலத்­தில் கல்வி, பண்­பாடு, கலா­சா­ரம், இறை­பக்தி ஆகி­ய­வற்­றின் கூட்­டுக் கல­வை­யால் உரு­வான தோற்­றத்­து­டன் யாழ்.குடா­நாடு விளங்­கி­யது. முழு நாட்­டை­யும் வழி நடத்­திச் செல்­லக்­கூ­டிய ஆற்­ற­லும், தகை­மை­யும் கொண்ட தலை­வர்­கள் இங்கே உரு­வா­கி­யி­ருந்­தார்­கள்.

இவர்­க­ளால் முழுத் தமி­ழர்­க­ளும் பெரு­மை­ய­டைந்­த­னர். அன்­றைய இளம் சமு­தா­யத்­தி­னர் பெரி­ய­வர்­களை மதிக்­கின்ற அருங் குணத்­தைக் கொண்­டி­ருந்­தார்­கள். பண்­பும், பணி­வும் அவர்­க­ளி­டம் நிறைந்து காணப்­பட்­டன. இத­னால் தீய சிந்­த­னை­க­ளுக்கு அவர்­கள் இடம்­கொ­டுக்­க­வில்லை. ஆனால் இன்று இதற்கு முற்­றி­லும் எதிர்­ம­றை­யான காரி­யங்­களே இடம்­பெற்று வரு­கின்­றன.

தமது இனத்­தின் உரி­மை­க­ளுக்­கா­கக் கள­மாடி உயிர்த் தியா­கம் புரிந்த ஆயி­ர­மா­யி­ரம் இளை­ஞர்­கள் இந்­த­மண்­ணில்­தான் தோன்­றி­னார்­கள். அவர்­கள் தமது இனத்­தின் மீட்­சியை மட்­டுமே நினை­வில் கொண்­டி­ருந்­தார்­கள். தம்­மையோ அல்­லது தமது குடும்­பத்­தைப் பற்­றியே அந்த இளை­ஞர்­கள் சிறி­து­கூட எண்­ணிப் பார்த்­த­தில்லை.

ஆனால் குடா­நாட்­டின் இன்­றைய அவ­ல­நி­லைக்கு இளை­ஞர்­கள் சிலரே கார­ண­மாக இருப்­ப­தைக் காணும்­போது தாங்­க­மு­டி­யாத சோகம் மனம் முழு­வ­தும் நிறைந்து காணப்­ப­டு­கி்ன்­றது. வாள்­வெட்­டுக் குழுக்­க­ளால் முழுக் குடா­நா­டும் அமை­தியை இழந்து நிற்­கின்­றது.

இந்­தக் குழுக்­க­ளில் இள­வ­ய­தி­னர் அங்­கம் வகிப்­ப­தைக் காணும்­போது நெஞ்­சம் பதை­ப­தைக்­கின்­றது. தமிழ் இனத்­துக்கு விரோ­த­மா­ன­வர்­கள் இந்­தக் குழுக்­களை உரு­வாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் எம்­ம­வர்­க­ளின் புத்­திக்கு என்ன நடந்­தது? சொல்­வார் சொல் கேட்டு நடப்­ப­தற்கு இவர்­கள் ஏன் துணிந்­தார்­கள்?

குடா­நாட்­டின் சில பகு­தி­க­ளில் சுற்­றி­வ­ளைப்பு மற்­றும் தேடு­தல் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் பொலி­ஸா­ரு­டன் அதி­ர­டிப் படை­யி­ன­ரும் கள­மி­றங்­கி­ய­தா­கத் தெரி­கி­றது. போர்க் காலத்தை இது நினை­வு­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு வழி­ய­மைத்­துக் கொடுத்­த­வர்­கள் நாமே­யொ­ழிய வேறு எவ­ரு­மில்லை.

பாட­சாலை மாண­வர்­க­ளில் சில­ரும் இந்த வாள்­வெட்­டுக் குழுக்­க­ளில் அங்­கம் வகிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. இத்­த­கை­ய­வர்­கள் தமது பெற்­றோ­ருக்­கும், தமக்­குக் கற்­பிக்­கின்ற ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் மதிப்­புக் கொடுத்து நடப்­பார்­க­ளென எவ்­வாறு எண்ணுவது? இனத்­தின் ஆரம்ப புள்­ளி­யாக இளை­ஞர்­களே காணப்­ப­டு­கின்­ற­னர்.

இந்­தப் புள்ளி பழு­து­ப­டு­மா­னால் இனத்­தின் எதிர்­கா­லமே கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும். குடா­நாட்டு இளை­ஞர்­கள் அடா­வ­டிக் குழுக்­க­ளில் இணைந்து தமது இனத்­தைச் சார்ந்த மக்­க­ளுக்கு எதி­ரா­கவே செயற்­ப­டு­கின்­ற­னர். தமது சொந்த இனத்­தையே அழிக்­கின்ற கேவ­ல­மான செய­லில் இவர்­கள் இறங்­கி­யுள்­ளதை எவ்­வாறு மன்­னிக்க முடி­யும்.

குடா­நாட்­டின் இன்­றைய அவ­ல­நிறை கார­ண­மாக மக்­கள் புலி­கள் இங்கு இருந்த காலத்தை நினை­வு­ப­டுத்த வேண்­டிய தேவையை ஏற்­ப­டுத்தி விட்­டது. தேவை­யான உணவு அன்று கிடைக்­க­வில்லை. ஏனைய அத்தி­யா­வ­சிய தேவை­க­ளை­யும் நினைத்­துக்­கூ­டப் பார்க்க முடி­ய­வில்லை.

எந்த வேளை­யி­லும் உயி­ருக்கு ஆபத்து நேர்ந்­து­வி­ட­லா­மென்ற அச்­ச­வு­ணர்வு உள்­ள­மெல்­லாம் பர­விக் கிடந்த கால­மது. ஆனால் உள்­ளூர் எதி­ரி­க­ளி­ட­மி­ருந்து எவ்­வித அச்­சு­றுத்­த­லை­யும் அந்த மக்­கள் எதிர்­கொள்­ள­வில்லை. அவர்­க­ளுக்­குப் பாது­காப்பு அர­ணாக புலி­கள் விளங்­கி­னார்­கள். நடு­நிசி வேளை­யி­லும் தமது தேவை கரு­திப் பெண்­க­ளால் நட­மாட முடிந்­தது. அடா­வ­டிப் பேர்­வ­ழி­க­ளை­யும், திரு­டர்­க­ளை­யும், கொள்­ளை­யர்­க­ளை­யும் எங்­கும் காண முடி­ய­வில்லை.

ஆனால் இன்று இத்­த­கை­ய­வர்­க­ளால் மக்­கள் குழம்­பிப் போய்க் கிடக்­கி­றார்­கள் இவர்­க­ளைக் கண்டு அஞ்­சு­கி­றார்­கள் . இந்த நிலை தொட­ரு­மே­யா­னால் மக்­க­ளின் மன­நிலை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டு­வி­டும். பெற்­றோர் தமது பெண் குழந்­தை­க­ளின் எதிர்­கா­லம் தொடர்­பா­கக் கவ­லை­ய­டைந்­துள்­ள­னர். அவர்­க­ளின் பாது­காப்­புத் தொடர்­பான அச்­ச­வு­ணர்­வும் எழுந்து நிற்­கின்­றது. இதைத் தொட­ர­வி­டு­வது நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை.

ஒரு­சில இளை­ஞர்­க­ளால் குடா­நாட்­டில் வசிக்­கின்ற இளை­ஞர்­கள் அனை­வர்­கள் மீதும் சந்­தே­கப் பார்வை விழுந்­துள்ளது.  வெளி­யி­டங்­க­ளில் உள்­ள­வர்­க­ளும் இவர்­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்­குத் தயங்குவார்கள்.இது­வொரு ஆபத்­தான நிலை­யா­கும். அடா­வ­டித் தனங்­க­ளில் ஈடு­ப­டு­கின்ற இளை­ஞர்­கள் முத­லில் தம்­மைத்­தாமே திòத்­திக்­கொள்ள வேண்­டும்.இதற்கு அவர்­கள் இணங்­கா­து­விட்­டால் முழுச் சமு­தா­யத்­துக்­கும் கேடு ஏற்­பட்­டு­வி­டு­மென்­பதை மறந்­து­வி­டக் கூடாது.