விஷாலின் இரும்புத்திரை 2 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.

பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்தை மித்ரன் இயக்கவில்லை. மாறாக இயக்குநர் எழிலின் முன்னாள் உதவியாளரான புதுமுகம் ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.

இரும்புத்திரை மட்டும் அல்ல துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் விஷாலும் சரி, பிரசன்னாவும் சரி நடிப்பால் மிரட்டியிருப்பார்கள்.

இதற்கிடையே இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடித்தக்கது.