இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களை விவாகரத்து செய்த பிரபல நடிகை மீரா வாசுதேவன் 8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரியாகியுள்ளார்.

எஸ்.பி.பி.சரண், வெங்கட்பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘உன்னை சரணடைந்தேன்’. இந்தப் படத்தில் வெங்கட்பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். இந்தப் படத்திற்கு முன் தெலுங்கில் ‘கோல்மால்’ என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தார். இந்தப் படத்தையடுத்து அவருக்கு தெலுங்கில் எந்த வாய்ப்பும் வரவில்லை.

பின்னர் தமிழில் ‘அறிவுமணி’, ‘ஜெர்ரி’, ‘கத்திக்கப்பல்’ ஆகிய படங்களில் நடித்தார். அதையடுத்து இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். மேலும் ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 8 வருடங்களுக்குப் பின் ‘ஆட்ட நாயகன்’ என்ற படத்தில் சக்தி வாசுக்கு அன்னியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மீரா வாசுதேவன், ஒளிப்பதிவாளர் அசோக் குமார் என்பவரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து அனிஷ் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீரா. அவரையும் விவாகரத்து செய்தார் மீரா வாசுதேவன்.

இந்நிலையில் அவர் தன் மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவை தேடி வந்துள்ளார். அண்மையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணியாக நடித்துள்ளார் மீரா.

சினிமா வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தால் சென்னையிலேயே செட்டிலாக முடிவு செய்துள்ளார். அத்துடன் டிவி சீரியல்களிலும் வாய்ப்பு தேடி வருகிறார். இதற்கு முன் ‘பெண்’ சீரியலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.