இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது தரப்பு ஆட்டத்தை இடை நிறுத்தியுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முன்றாம் நாளான இன்று 06 விக்கட் இழப்புக்கு 322 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டத்தை இடை நிறுத்தியுள்ளது.

அதன்படி இங்கிலாந்து 461 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

நேற்று காலியில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் 97 ஓவர்கள் வரையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ருவன் பெரேரா 75 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி போட்டியின் இரண்டாம் நாளான நேற்று இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும், சந்திமால் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 322 ஓட்டங்களை பெற்றது.