பதுளை மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பசறை, லுனுகலை, பதுளை, ஹாலிஎல, பண்டாரவளை, எல்லை, அப்புத்தளை, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்படலாம் என அந்த நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மண்மேடுகளை அண்மித்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.