இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 05வது ஒருநாள் போட்டியின் பின்னர் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது தொடரின் பதில் பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்‌ஸன் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 05வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 16ம் திகதி இடம்பெற உள்ளதுடன், நடைபெற்ற 04 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.