கிறிஸ்தவர்களின் புனித தினமான ஈஸ்டர் திருநாளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கால் இலங்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த நிலையில் உலக தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் எமது மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்சில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவு 12 மணியில் இருந்து ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.