ஈரான் நாட்டில் சபாஹர் துறைமுக நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன், கார் வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த வெடிகுண்டு தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் அந்தப் பகுதியில் இருந்த கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி போலீஸ் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றது தெரியவந்தது.