உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் முதல்சுற்று வாக்களிப்புக்காக வாக்களிப்பு நிலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் உக்ரைனின் தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரோசென்கோவுடன் நகைச்சுவை நடிகர் வொலோடிமிர்
செலென்ஸ்கிரூபவ் முன்னாள் பிரதமர் ஜூலியா தெமோசென்கோ ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக
போட்டியிடுகின்றனர்.

ரஷ் சார்பு வேட்பாளர்கள் யாரும் முன்னணி போட்டியாளர்களாக இல்லை.

இன்றைய வாக்கெடுப்பில் வேட்பாளர்களில் ஒருவரேனும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறாத பட்சத்தில் ஏப்ரல 21ஆம் திகதி நiபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்களிப்பில் முன்னணியிலுள்ள இரு வேட்பாளர்கள் போட்டியிடுவர்.

மொத்தம் 39 வேட்பாளர்கள் வாக்குப் பெட்டியில் உள்ள போதிலும் மூன்று வேட்பாளர்கள் மாத்திரமே முன்னணியில்
வெற்றியைப் பெறும் வகையில் கருதப்படுகின்றனர்.