ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர் சார்ஜர் கேபிள்கள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது என்ற குற்றச்சாட்டை நிச்சயம் முன்வைக்கின்றனர். இவை அந்தளவு விரைவில் சேதமடையும் வகையில் உருவாக்கப்படுகிறதா? அல்லது நம் பயன்பாட்டில் மாற்றங்கள் தேவையா? என்பது அவரவர் பயன்பாடு மட்டுமே பதிலாக இருக்க முடியும். எதுவாக இருந்தாலும், சார்ஜர் கேபிள் அடிக்கடி பாழாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

சார்ஜரை பயன்படுத்தி அதனை கழற்றும் போது பிளக் பகுதியை பிடித்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். பயன்பாடுகளின் போது இருபுறங்களை மடிக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும். பயன்படுத்தாத சமயங்களில் அவற்றை பாதுகாப்பாக கேஸ் ஒன்றில் வைக்கலாம்.

கேபிள் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் பகுதியில் இணைக்கும் பகுதிகளில் கேபிள் ப்ரோடெக்டர்களை பாதுகாப்பு அணிகலனாக அணிவிக்கலாம். இவை சார்ஜர் கேபிள் எளிதில் பாழாவதை தவிர்க்கும்.

சார்ஜர் கேபிள் பாழாவதை தவிர்க்க மேக்னெடிக் அடாப்டர்கள் மிகவும் சரியான துணையாக இருக்கும். இவை வழக்கமான கேபிள்களை விட பயன்பாட்டில் வித்தியாசம் கொண்டிருப்பதால் எளிதில் பாழாகாது.

சார்ஜர் கேபிள்களை பாதுகாக்கும் மற்றொரு குறைந்த பட்ஜெட் பொருளாக இது இருக்கிறது. எலெக்ட்ரிக் டேப் ஒன்றை சார்ஜர் கேபிள் முனைகளில் ஒட்டி வைக்கலாம்.