ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் கலந்தகொண்டு விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக தற்போது அந்த தொடரில் இருந்து விலகியுள்ளாா்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரின் போது 3வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. அப்போது பந்து வீசிய ஆஸ்திரேலியா அணியின் பான்கிரிப்ட் தனது கையில் இருந்த உப்புத்தாளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தினாா். இதனை எதிரணியின் கேப்டன் டூ பிளசிஸ் நடுவரிடம் முறையிட்டாா்.
இதனைத் தொடா்ந்து பந்து சேதப்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைகேப்டன் வாா்னரின் ஒப்புதலுடன் தான் இந்த செயல் நடைபெற்றதாக தொிவிக்கப்பட்டது. அதன் பின்னா் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன், துணைகேப்டன், பந்துவீச்சாளா் பான்கிரிப்ட் ஆகியோா் தண்டணைக்குள்ளாக்கப்பட்டனா்.

அந்த வகையில் ஸ்மித் மற்றும் வாா்னருக்கு ஒரு ஆண்டு சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும், பான்கிரிப்ட் 9 மாத காலம் சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

சா்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதால் ஸ்மித் உள்ளூா் போட்டிகளான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறாா். அண்மையில் நடைபெற்ற போட்டியில் ஸ்மித்துக்கு முழங்கையில் பயங்கர காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக ஸ்மித்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், அறுவை சிகிச்சைக்குப் பின்னா் 6 வாரகாலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் தொிவித்துள்ளனா். இதன் காரணமாக அவா் பிக்பாஷ் தொடரில் இருந்து விலகியுள்ளாா்.

6 வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் அவா் அடுத்துவரும் பாகிஸ்தான் தொடரிலும், இந்தியாவின் ஐ.பி.எல். தொடரிலும் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்து வரும் இரு தொடா்களில் அவா் பங்கேற்காத பட்சத்தில் நேரடியாக மே மாதம் நடைபெறும் உலகக்கோப்பைத் தொடரில் அவா் களம் இறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.