டிப்பில் பல சாதனைகளுக்கு சொந்தகாரர் நடிகர் கமலஹாசன். அவர் செய்த சவாலான செயல்களை எல்லாம் தற்போது உள்ள நடிகர்கள் செய்ய தயங்கி கொண்டிருக்கும் நிலையில் அவரே செய்ய தயங்கி வரும் ஒரு காரியத்தை நடிகர் விஷால் செய்ய இருக்கிறார்.

அது எதுவென்றால், திருப்பரங்குன்றம் MLA ஏ.கே.போஸ் சில நாட்களுக்கு முன் இறந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதில் விஷால் போட்டியிட உள்ளாராம். தற்போது இதற்கான வேலைகளில் தான் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இந்த தேர்தலில் தற்சமயம் கட்சி ஆரம்பித்துள்ள கமலே போட்டியிட தயங்கி வருகிறார். ஏனென்றால் இதில் எப்படியோ ஆளும் கட்சி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளதாம். அதனால் முதல் தேர்தலிலேயே தோற்றால் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என நினைக்கிறார், கமல்.

இதனால் இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றே தெரிகிறது. ஆனால் விஷால் போட்டியிடுவது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.