சென்னை : ஒவ்வொரு ஆண்டும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மதிய உணவு வழங்குவதை வழக்கமாக நடிகர் விஜய் வைத்துள்ளார்.

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத கால்பந்தை விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகின்றார். நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு பரிசுப் பொருட்கள் மதிய உணவு விருந்து வழங்குவதை விஜய் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் விஜய் சார்பாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்நிகழ்வை நடத்தினார். இதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.