ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, மாகாண சபையின் அதிகாரம் ஊவா மாகாண ஆளுநர் வசமாகின்றது.

நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளினதும் பதவிக்காலங்கள் தற்போது நிறைவடைந்துள்ளன.

தென் மாகாண சபையின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது.

வட மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலம் 2017 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்ததுடன், வடக்கு, வட மேல் மாகாணங்களின் பதவிக் காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியுடன் மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைந்தது.

இதேவேளை, மேல் மாகாண சபையின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நிறைவடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.