இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்சினையாக தலைவலி மாறிவிட்டது. நமது பணிசூழல் மற்றும் வேலைப்பளு காரணமாக அடிக்கடி நமக்கு தலைவலி ஏற்படலாம். பெரும்பாலும் நாம் தலைவலியை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அல்லது தற்காலிக நிவாரணம் மூலம் அதனை சரிசெய்து கொள்ள நாம் நினைக்கிறோம்.

இவ்வாறு தலைவலியை சாதாரணமாக நினைப்பது மிகவும் தவறான செயலாகும். ஏனெனில் தலைவலி சில ஆபத்தான நோய்களின் ஆரம்ப நிலையாகவோ அல்லது அறிகுறியாகவோ இருக்கலாம். எந்த தலைவலியாக இருந்தாலும் அதனை உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் தலைவலி உங்கள் ஆரோக்கியத்தை பற்றி என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம்.

தலைவலியை பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது சாதாரண பதட்டத்தால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். எனவே உங்களுக்கு இருப்பது எந்த வகையான தலைவலி என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகும். நீங்கள் எந்த வகையான தலைவலியால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க மருத்துவர்கள் பல முறைகளை கையாளுகின்றனர்.

பெரும்பாலும், நீங்கள் ஒரு பதற்றம் தலைவலி, சைனஸ் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறீர்கள். இந்த வகை தலைவலி மந்தமான வலியுடன் மெதுவாக தொடங்கும். ஆனால் சில வகை தலைவலிகள் மாரடைப்பு, மூளை கட்டிகள் அல்லது மூளையில் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், அவை உங்கள் தமனிகள் மற்றும் நரம்புகள் சரியாக இணைக்கப்படவில்லை என்பதைக் குறிக்கலாம். பின்வரும் தலைவலிகளில் ஏதாவது உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

திடீரென தலைவலி ஆரம்பித்து அது தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இருந்தால் அது ” இடி தலைவலி ” எனப்படும். இந்த தலைவலி 60 நொடிகளுக்கு பின்னர் மோசமான நிலையை எட்டும், பொதுவாக இது மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.

உங்களுக்கு உடற்பயிற்சிக்குப் பிறகோ அல்லது உடலுறவிற்கு பிறகோ தலைவலி ஏற்பட்டால் அது எச்சரிக்கை மணியாகும். இது மூளைக் கட்டி அல்லது அனீரிஸின் அறிகுறிகளாக இருக்கலாம். முடிந்தளவு விரைவாக மருத்துவரை அணுகவும்.

கடுமையான தலைவலி உங்களின் பேச்சை தடுமாற வைக்கலாம் மேலும் பார்வையை மங்கச் செய்யலாம். இதனால் குழப்பம், நினைவக இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வகை தலைவலி இருந்தால் நீங்கள் தியானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். நிலைமை மோசமாகும் போது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

55 வயதிற்கு மேல் தலைவலி ஏற்படுவது என்பது ஆபத்தான ஒன்றாகும். இதற்கு முன் உங்களுக்கு தலைவலி ஏற்படாமல் இருந்தோ அல்லது வழக்கத்திற்கு மாறான தலைவலி ஏற்பட்டாலோ நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு உங்களுக்கு தலைவலி வந்தால், அது மூளையதிர்ச்சி ஆகும். நீங்கள் சிகிச்சை பெறாவிட்டால் இது மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும்.

உங்கள் தலைவலி 24 மணி நேரத்திற்கு பிறகு மோசமடைந்து விட்டால் அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 24 மணி நேரம் ஆகியும் தலைவலி தீராமல் இருந்தால் அது மூளை பாதிப்பின் அறிகுறியாகும். உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

உங்கள் தலைமுறையில் யாருக்காவது தலைவலி இருந்தால், உங்களுக்கு திடீரென புது வகை தலைவலி வரும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த புதுவகை தலைவலி மூளை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.