உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தான் எதிர்பார்த்ததை விடவும் இலங்கை அணி சிறப்பாக விளையாடியதாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இன்று நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அணியைத் தெரிவு செய்யும் போது சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அணியின் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கியிருக்காவிட்டால் புள்ளிப் பட்டியலில் 5 ஆம் இடத்தை அடைந்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்காமையே முன்னோக்கிச் செல்வதற்கு தடையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போட்டிகளில் தோல்வியடைந்தால் வீடுகளுக்கு கல் வீசப்படும் என்ற போதிலும் இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.