பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த புகையிரத ஊழியர்கள் மேற்கொள்ளும் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் 2 வது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக ரயில் இயந்திர தொழிநுட்பவியளாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (19) முதல் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் தொடர்சியான போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள, சாரதிகள், நிலைய கட்டுப்பாட்டளர்கள் மற்றும் ரயில் பரிசோதனை முகாமையாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் விபத்துக்களின் போது ஏற்படக்கூடிய நட்டத்தை ரயில் சாரதிகள் மற்றும் ஊழியர்களிடம் அறவிடுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.