தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்து கலாய்த்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்

நடிகை ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். ஸ்ருதி லண்டன் சென்று அவரை பார்ப்பதும், அவர் இந்தியா வருவதுமாக உள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி புதுப் படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

ஸ்ருதி ஹாஸன் ஹலோ சகோ என்கிற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அது தவிர அவர் படங்களில் எதுவும் நடிக்கவில்லை. அவர் மைக்கேலை திருமணம் செய்து கொள்ளப் போவதால் தான் படங்களில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின.

தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்த ஸ்ருதி ஹாஸன் அப்படியா, சொல்லவே இல்லை என்பது போன்று கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை மைக்கேல் கார்சேலுடன் வெளிநாட்டில் கொண்டாடினார். மைக்கேலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது