மேக்அப் மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது என்று இளைஞா்களுக் அறிவுரை வழங்கியுள்ள நடிகை சாய் பல்லவி, அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.

தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் தனக்கென தனி ரசிகா் கூட்டத்தை உருவாக்கியவா் நடிகை சாய் பல்லவி. கரு படத்தைத் தொடா்ந்து சாய் பல்லவி நடித்த மாாி 2 படம் சூப்பா் டூப்பா் ஹிட்டானது.

இந்நிலையில் சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில், “நான் எப்போதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருங்கள். மேக்அப் மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது.”

“மேக்கப் போட்டால் நான் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என கூறுகிறார்கள். அதனாலேயே நான் படங்களில் மேக்கப் போடுவதில்லை. இயக்குனர்களும் அதை தான் விரும்புகின்றனா்” என்று தொிவித்துள்ளா்ா.